தமிழகத்தில் அதிமுக உட்கட்சி பூசலால் அரசு நிர்வாகம் சரிவர இயங்காமல் உள்ளது. இந்நிலையில்தான் திமுக செயல்திட்டக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை 13ம் தேதி செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக ஆட்சி அமைக்காத நிலையில் திமுக அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவலை தெரிவித்துள்ளது.