Tamil Nadu | தமிழ் நாடு
ரோட்ல விட்டு நாலா பொலந்துருவேன் – தி.மு.க. நிர்வாகி சொந்த கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல்.. ஆடியோ வைரல்! கதிகலங்கிய மக்கள்
தமிழகத்தில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் போட்டா போட்டி போடும் சூழல் தற்போதிருந்தே உருவாகி வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், திமுக பிரமுகர் தன் சொந்த கட்சியை சேர்ந்தவரை கொலை மிரட்டல் விடுத்து திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுர அவைத்தலைவரும், திமுக கட்சியை சேர்ந்த எம்.எஸ். குமார் தனது பதவிக்கு போட்டியாக இருப்பதாக நினைத்து,
தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ள நாகராஜனை தகாத வார்த்தையால் பேசியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோவில் குமார் நாகராஜனை, “கட்சியில நீ எனக்கு எல்லாம் ஒரு சுண்டக்கா, ரோட்ல விட்டு நாலா பொலந்துருவேன், உன்னுடைய ஊர்ல ஒரு மணி நேரம் இறங்கி நின்னா நீ கதை கந்தலாயிடுவ,
அப்புறம் , ரிமோட் மாதிரி உட்கார்ந்த இடத்தில இருந்தே உன்ன ஆளே அடையாளம் தெரியாம காலிபண்ணிடுவேன்” என்று தகாத வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார்.

nagaraja-dmk
இந்த ஆடியோ பதிவானது சமூக வலைதளங்களில் பரவி, திமுகவின் அரசியல் பின்புலத்தை மக்களுக்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
