தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சற்றுமுன் சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும், காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.