விவசாயிகளின் நலன் கருதி வருகின்ற 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அவர்களின் நலன் கருதி திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், இடது சாரி கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் பலவும் கலந்து கொண்டன. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கிய தீர்மானமாக, தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்து. மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி பொதுக்கூட்டத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இவை இல்லாமல் நீட் தேர்வு, குடிநீர் பிரச்னை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.