புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சரியா போச்சு.. பெயரை சொல்லவே பயமா இருக்கு.. முடிச்சுவிடீங்க போங்க

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியதில் இருந்தே பெரும் அரசியல் புள்ளிகள் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது. நடு நடுங்கி போயிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடந்தது.. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் சூசகமாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதில் மற்ற காட்சிகள் பிழை கண்டுபிடிக்கவே ஒரு நாள் ஆகிவிட்டது. அவர் பேசி முடித்த பின்னர், அடுத்த நாள், பாசிசம் பற்றி விஜய் பேசியதை வைத்து மற்ற கட்சி தலைவர்கள் சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால் பாசிசம் தொடர்பாக விஜய் பேசியதில், மக்களுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை என்பது தான் உண்மை.

மற்ற கட்சிகளுக்கு, வேண்டுமென்றால் ஒரு போட்டியே வைத்து விடலாம். யார் அதிகமாக விஜயை விமர்சிக்கிறார்களோ அவர்களுக்கு எதோ ரொக்க பணம் கிடைக்கபோவதை போல அப்படி போட்டி போட்டு விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில், தொல். திருமாவளவனுக்கு, சீமானுக்கும் தான் போட்டியே.. மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து தொண்டை தண்ணீர் வற்ற கூப்பாடு போடுகிறார்கள்.

கண்ணுல பயம் தெரியுது..

இப்படி இருக்க, அடுத்ததாக விஜய் வரும் டிசம்பர் மாதம் முதல் மண்டலவாரியாக விசிட் அடிக்கவுள்ளார். இதற்க்கு நடுவில், திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் வேறு கலந்து கொள்ள போகின்றனர். என்ன நடக்க போகிறதோ..

ஒரு புறம் இப்படி இருக்க, மறுபுறம், திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்று உளவுத்துறை மூலமாக தகவல் எடுத்தனர். விஜய்யை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம். இருப்பினும் இளைஞர்களை விட்டுவிடக் கூடாது என்று பெரிய தலை கட்டளையிட்டதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும் தேர்தல் களம், விஜய் vs உதய் என்று மாறும் நாட்கள் தூரத்தில் இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக வருகிற 5 மற்றும் 6 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்ல உள்ளார். இதுகுறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.

அதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பொன்முடி, உதயநிதி வருகையின்போது ஆயிரக்கணக்கானோர் இணைந்து பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும். அதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது அவசியம். இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், “ஒரு வாரத்துக்கு முன்பு இங்கு என்ன நடந்தது, யார் வந்து சென்றார் உங்களுக்கு தெரியும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அவரை வளர்த்துவிட வேறு யாரும் தேவை இல்லை. நீங்களே போதும் என்று தற்போது நெட்டிசன்கள் இதை விமர்சித்தும் வருகின்றனர்.

- Advertisement -

Trending News