fbpx
Connect with us

Cinemapettai

நேரா முதல்வர் பதவியா.? மேடையில் விஜய்யை சீண்டிய பிரபலம்.!

Actor-Vijay-in-IARA-Awards-2018

News | செய்திகள்

நேரா முதல்வர் பதவியா.? மேடையில் விஜய்யை சீண்டிய பிரபலம்.!

சமீபத்தில் நடந்த சர்கார் வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு புது விஜய்யை அனைவரும் பார்த்தார்கள் பொதுவாக விஜய் மேடைக்கு வந்த ஒரு சில வார்த்தைகளை பேசி விட்டு விலகி விடுவார் ஆனால் இந்த முறை இதற்காக இசை வெளியீட்டு விழாவில், மேடையில் பேசி தெரிவித்துள்ளார்.

மேடையில் அவர் பேசியது இணையதளங்களில் படுபயங்கரமாக வயலில் ஆகியது, மேலும் அவர் பேசியதாவது திரைப்படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை ஆனால் நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என பேசினார் இதற்கு அரங்கமே அதிர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் மெர்சல் படத்தில் அரசியல் இருந்தது ஆனால் சர்க்கார் படத்தில் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் முருகதாஸ், நாங்கள் சர்க்கார் அமைப்பு தான் தேர்தலில் நிற்கிறோம் எடுத்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள் என பேசினார், மேலும் தலைவன் நல்லவனாக இருந்தால் அனைத்தும் நல்லதாகவே அமையும் நெருக்கடி நேரத்தில் கண்டிப்பாக ஒரு நல்ல தலைவன் கிடைப்பான் எனக் கூறினார்.. இதற்க்கு  ரசிகர்கள் தளபதி தளபதி என கோஷம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் திமுக சார்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது அதில் ஸ்டாலின் கனிமொழி என பலர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர்  மதிமாறன் சில நடிகர்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மீந்துபோன வசனங்களை பேசி வருகிறார்கள் அவர்களெல்லாம் தளபதியாக முடியாது, இப்படி வசனம் பேசும் அவர்களுக்கு முதலில் எம்எல்ஏ ஆனால் தான் முதலமைச்சராக முடியும் என்ற அடிப்படையைக் கூட தெரியவில்லை நேரடியாக முதலமைச்சராக ஆசை படுகிறார்கள் என மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.

மேலும் மறைந்து போன திமுக தலைவரால் தளபதி என்ற பெயர் சூட்டப்பட்டது ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தில் ஒரே ஒரு தளபதி இவர் தான் எனக் கூறியதும் திமுக தொண்டர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இவர் பேசியது விஜய் ரசிகர்களிடம் கோவத்தை உண்டாக்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top