கட்சியை காப்பாற்ற பிரேமலதா தொடங்கிய வேலை.. அபசகுனத்தால் மனம் உடைந்து போன சம்பவம்

DMDK General Secretary Premalatha is striving to fulfill the ambition: தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போதே அரசியலில் இறங்கினார் நடிகர் விஜயகாந்த். தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத இரு பெரும் ஆளுமைகள் கோலோச்சி இருக்கும்போதே தைரியமாக அக்கட்சிகளுக்கான மாற்று சக்தியாக உருவெடுத்தார் விஜயகாந்த்.

தேமுதிக எனப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக திகழ்ந்தார் நடிகர் விஜயகாந்த். படிப்படியாக சட்டசபை தேர்தலை சந்தித்த விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராகவும் பின் எதிர்க்கட்சித் தலைவராகவும் உருவெடுத்தார். இதற்கு பின்னான விஜயகாந்தின் கூட்டணி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அடுத்து வந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற இயலாமல் போனது.

உடல்நிலையில் சற்று சரிவை சந்தித்த விஜயகாந்த் சிறிது காலம் சினிமா மற்றும் அரசியலில் இருந்து ஓய்வெடுத்தார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் மூலம் நற்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் சென்னை திருவேற்காட்டில் உள்ள கட்சி மாநாட்டில் விஜயகாந்த் சில முக்கிய முடிவுகளை எடுத்தார்.

Also read: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த 4 படங்கள்.. போராடி தூக்கி விட நினைத்த கேப்டன்

அதன்படி கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி  வைப்பது போன்ற முக்கிய முடிவுகள் விஜயகாந்த் எடுப்பதற்கு கட்சியில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அவர்களை  நியமித்து அவரது கையை பற்றி உயர்த்தினார் விஜயகாந்த்.

டிசம்பர் இறுதியில் விஜயகாந்தின் மறைவை அடுத்து கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு மாற்றப்பட்டது.  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்க் கொள்ளும் பொருட்டு தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் ஆன பின் முதன் முறையாக  கொடியேற்றினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கொடி கம்பத்தின் உச்சியை அடைவதற்கு முன்பாகவே கீழே விழுந்து அபசகுனமானது. பின்பு மறுபடியும் கொடியேற்றிய  பிரேமலதா விஜயகாந்த், தடைக்குப் பின் தான் வெற்றி உண்டு. எந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்று விஜயகாந்த் ஆசைப்பட்டாரோ அவருடைய பாதையில் சென்று அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்தார் பிரேமலதா விஜயகாந்த்.  நல்லவர்களின் லட்சியம் நிறைவேறட்டும். இவரின் தன்னம்பிக்கைக்கு ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also read: விஜயகாந்த் இறந்த பிறகு எழும் 5 கோரிக்கைகள்.. பிரேமலதா ஆசை நிறைவேறுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்