நீ இதை செய்யுடா நட்டு.. வைரலாகுது தினேஷ் கார்த்திக்கின் ட்விட்டர் பதிவு

நெட் பௌலர் டு மூன்று வித பார்மட்டிலும் அறிமுகமான வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுவிட்டார். இன்று உலகளவில் ரீச் பெற்றுள்ள மனிதர். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்.

தினேஷ் கார்த்திக் தமிழகம் மட்டுமன்றி இந்திய கிரிக்கெட்டிலும் பிரபலமான பெயர் தான். அந்த காலகட்டத்தில் தோனி என்ற ஜாம்பவான் இருந்தும் தனக்கென்ற கிரிக்கெட் கேரியரை உருவாக்கியவர். இளம் வீரர்கள், மற்றும் டீம்மை வழி நடத்துவதிலும் வல்லவர் தான் கார்த்திக்.

சமீபத்தில் இவரது தலைமையில் பல முன்னணி வீரர்கள் இன்றியும் முஷ்டாக் அலி டி20 தொடரை 2-வது முறையாக தமிழகம் வென்றது. இந்நிலையில் தமிழகம் கோப்பை வென்றது பற்றி நடராஜன் பின்வருமாறு ட்விட்டரில் பதிவிட்டார்.

“நாம் சயீத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது என்பது, நமது தமிழக கிரிக்கெட்டில் எவ்வளவு திறமை உள்ளது என்பதனை அசத்தலாக பறைசாற்றி உள்ளது. பெருமையாக உள்ளது. அருமையான கூட்டுமுயற்சி, தலைவணங்குகிறேன் தினேஷ் அண்ணா. உண்மையான அதிரடி மாஸ்டர்.” என பதிவிட்டு இருந்தார்.

dk tweet for natrajan

“நன்றிடா நட்டு. உன்னை நாங்கள் இந்த தொடரில் மிஸ் செய்தோம். ஆனால் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது நீ இன்று இருக்கும் இடத்தை நினைத்து. நீ வருங்கால சந்ததி தங்கள் கனவுகளை நோக்கி செல்ல, நல்ல உந்துசக்தியாக இரு.” என கார்த்திக் பதில் தட்டியுள்ளார்