Dinesh Karthik F
Dinesh Karthik F

தமிழகம் மட்டுமன்றி கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ரோஹித், விராட் போன்றவர்களை பிண்ணுக்கு தள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். நிதாஸ் கோப்பை பைனலில் இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்தார் தினேஷ்.25,633 பந்துகளில் கிடைக்காத பெயர், எட்டுப் பந்துகளில் கிடைத்து விட்டது. தோணியை போல 6 அடித்து ஆட்டத்தை ஜெயித்து `மேட்ச் வின்னர்’என்ற பட்டம் பெற்றுவிட்டார்.

Dinesh karthi
Nidhaas Trophy

அந்த வெற்றிக்கு பின் சென்னை வந்த இவர் பத்திர்கையாளர்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் சிறு தொகுப்பு இங்கே …

பேட்டிங் செல்லும் முன் மனநிலை

சில நேரங்கள்ல வெளியே உட்கார்ந்து மேட்ச் பார்த்துட்டிருக்கும்போதுகூட பிரஷர் ரொம்ப இருக்கும். இந்த மேட்ச்லயும் அப்படித்தான். நிலைமை எப்படியிருந்தாலும், நான் மைதானதுக்குள்ள போயிட்டா, எவ்வளவு அமைதியா இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியா இருப்பேன். முதல் பால்ல சிக்ஸர் அடிச்சதும் ஒரு நம்பிக்கை கிடைச்சது. கிரீஸுக்குள் இருந்தப்போ, எந்த ஏரியாவுல, எந்த கேப்ல பந்தை அடிக்கணும்; ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பணும்… இந்த இரண்டு விஷயங்கள்லதான் கவனமா இருந்தேன்.

அதிகம் படித்தவை:  ஜூனியர் ஹீரோஸ் கூட நடிச்ச சீனியர் நடிகைகள் யார் யார்னு தெரியுமா?

ஸ்கூப் ஷாட் எப்படி

ஸ்கூப் ஷாட்லாம் பிராக்டீஸ் பண்றது கஷ்டமான விஷயம். அடிபட நிறைய சான்ஸ் இருக்கு. குத்துமதிப்பா இந்த இடத்துல பந்து வரப்போகுதுன்னு ஒரு ஃபீல் கிடைக்கும். அப்போ கரெக்ட்டா அடிச்சிடணும். அவ்வளவுதான். அதை பிராக்டீஸ்லாம் பண்ண முடியாது. டி வில்லியர்ஸ்கூட இந்த ஷாட் பிராக்டீஸ் பண்ண மாட்டார்.

வாஷிங்டன் சுந்தர் , விஜய் சங்கர் – தமிழன் டா

சுந்தர் கூடவும், விஜய் கூடவும் தமிழ்ல பேசிப்பேசி பழக்கமாயிடுச்சு. திடீர்னு இங்கிலீஷ்ல பேசுனா, அது ஒரு மாதிரி நெருடலா இருக்கும். தமிழ்ல பேசுறது இயல்பான விஷயம். அவங்ககூட இங்கிலீஷ்ல பேசுனாதான் வித்தியாசமா இருக்கும். மத்தபடி, பேட்ஸ்மேனை ஏமாத்தணும்னுலாம் பண்ணல.

 

DK – KKR

ஐ.பி.எல். வேறு அணிகளில் விளையாடுவது பற்றி

சி.எஸ்.கே-ல ஆடணும்கிறது என்னோட ரொம்ப நாள் கனவு. ஆசை. வாழ்க்கை முழுக்க நான் தமிழ்நாட்டுக்காகத்தான் கிரிக்கெட் ஆடியிருக்கேன். வேற எந்த ஸ்டேட்டுக்கும் ஆடினதில்லை. சி.எஸ்.கே-ன்ற ஒரு அமேஸிங் டீமுக்கு என்னால ஆட முடியாமப் போச்சு. . ஏலம் நம்ம கையில இல்லை. குறிப்பிட்ட விலை மேலே போனாலோ, வேற டீம் எடுத்துட்டாலோ, ஒரு பிளேயரை எடுக்க முடியாம போகலாம். ஐ.பி.எல் பியூட்டியே இதான். வேற வேற மக்கள் வேற வேற ஊருக்கு ஆடுறது.

அதிகம் படித்தவை:  பல பாடல்களின் கலவையில் வெளிவந்த தமிழ்படம்2 படத்தில் சிவாவின் அறிமுக பாடல்.!

கொல்கத்தா அணியின் கேப்டன்

இது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பொறுப்பு. எனக்குக் கிடைச்ச பாக்கியம்.இந்த வருஷம் அவங்ககூட ஆடுறதை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டிருக்கேன். சாம்பியனாகணும்னு எல்லாருக்கும் ஆசைதான். ஃபர்ஸ்ட் அந்த டீம்ல எவ்வளவு மாற்றம் பண்ண முடியுமோ அதைப் பண்ணணும். அடுத்து நல்லா ஆடணும். குவாலிஃபையர் போகணும். அதுதான் இலக்கு. டாப்-4 போயிட்டா, அதுக்கப்புறம் சான்ஸ் இருக்கு. முதல்ல ஃபோகஸ் பண்ணணும். அதுக்கப்புறம் தான் சாம்பியன்ஸ் பட்டம்லாம்.”