நிதாஸ் கோப்பை

தமிழகம் மட்டுமன்றி கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ரோஹித், விராட் போன்றவர்களை பிண்ணுக்கு தள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். நிதாஸ் கோப்பை பைனலில் இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்தார் தினேஷ்.

DK

அந்த வெற்றிக்கு பின் சென்னை வந்த இவர் பத்திர்கையாளர்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இது தான் எனது கர்மா என்று நினைக்கிறேன். அது தான் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க எனக்கு உதவியது. இவ்வளவு ஆண்டுகளில் நான் செய்த அனைத்து நல்ல செயல்களின் பலனாக தான் அந்த பந்து கூடுதலாக இரண்டு மில்லிமீட்டர் கடக்க உதவியது என்று நம்புகிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பொழுது இத்தகைய வரவேற்பை எதிர்பார்க்க முடியாது.

DK – Abhisekh Nayar

பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் பேட்டிங் கிரீஸ் அளவை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுத்ததாக கூறினார். அதே போல் நண்பர் அபிஷேக் நாயர் என்னால் இதற்கு முன் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் செய்ய வைத்தார். போட்டிக்கு தயாராக அவர் எனக்கு உதவினார். அவர் எனக்கு செய்தவற்றை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அவர் செய்த தவறுகளை நான் செய்யாமல் அவர் பார்த்துகொண்டார்.

DK – Dhoni

தோனி நான் படித்திக்கொண்டிருக்கும் பாடத்தில் உச்சம் தொட்டவர். டாப்பர். தோனியுடன் என்னை ஒப்பிடுவது சரியில்லை. நான் இப்பொழுது தான் என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளேன். அவரின் பாதை வேறு ரகம்.நான் எப்போழுதும் அவரிடம் இருந்து கற்று கொண்டிருக்கிறேன். நான் இப்பழுது இருக்கும் நிலையை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்று கூறியுள்ளார் தினேஷ்.