Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிறந்தநாள் பரிசு – இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் !

ஆப்கானிஸ்தான் உடன் விளையாடும் இந்திய டெஸ்ட் அணியில் காயம் அடைந்த வ்ரிடிமான் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக்
தமிழகம் மட்டுமன்றி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ரோஹித், விராட் போன்றவர்களை பிண்ணுக்கு தள்ளி அனைவரின் கவனத்தையும் நிதாஸ் கோப்பை பைனலில் 6 அடித்து ஆட்டத்தை ஜெயித்து கொடுத்து ஈர்த்துவிட்டார்.
ஐபில் இல் கொல்கத்தா நிர்வாகம் கேப்டன் பொறுப்பை வழங்கினார். தன் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பிலும் அசத்தினார். அந்த அணி பிலே – ஆப் போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட்
இந்திய வரும் ஜூன் 14 பெங்களுருவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. ஐபில் போட்டியின் பொழுது காயம் அடைந்த சாஹா , விளையாடுவாரா அல்லது விலகுவாரா ? என்ற குழப்பம் நீடுது வந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு பதிலாக மாற்றுவீரராக கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் சாஹாவுக்கு மாற்றாக பார்திவ் படேல் அவர்களை தேர்தெடுத்த பிசிசிஐ , இம்முறை கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. கார்த்திக் இதற்கு முன் 2010 இல் தான் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார்.
கடந்த ஆப்பிரிக்க தொடரில் , பட்டேல் 4 இன்னிங்ஸ் ஆடி 56 ரன் மட்டுமே எடுத்தார். மேலும் சில கேட்சும் ட்ரோப் செய்தார். இதனை மற்றும் தற்பொழுது உள்ள பேட்டிங் பார்ம் அடிப்படையில் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று ஜூன் 1 தான் இவர் தன் 33 ஆம் வயதில் அடி எடுத்து வைத்தார். சிறப்பான பிறந்த நாளாக மாறிவிட்டது இவருக்கு. வாழ்த்துக்கள் டி. கே .
