Connect with us
boomerang-movie

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் !

News | செய்திகள்

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் !

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறிய சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை மாற்று வீரராக அறிவித்துள்ளது பிசிசிஐ.

DK

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்பொழுது 2வது டெஸ்ட் போட்டி 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.

saha

வலைப்பயிற்சியின் போது மேல் இடது தொடை தசைநார் காயம் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சஹா விலக்கப்பட்டு பார்த்திவ் பட்டேல் விளையாடி வருகிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை மாற்று வீரராக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே அங்கு நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிக்கு தேர்வாகி இருந்தார் தினேஷ் கார்த்திக். இப்போது அதற்கு முன்னதாகவே தென்னாப்பிரிக்கா செல்கிறார்.

parthiv patel

பார்த்திவ் பட்டேல் இந்த டெஸ்ட் போட்டியில் சில காட்சுகளை தவற விட்டார். முதல் இன்னிங்சில் ஆம்லா மற்றும் டு பிளேஸி கேட்சை விட்ட இவர், இரண்டாவது இன்னிங்சில் எல்கர் கேட்சை கோட்டை விட்டார். மேலேயும் பேட்டிங்குலும் 19 ரன்கள் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 24ம் தேதி தொடங்கும் மூன்றாவது போட்டியில் தினேஷ் கார்த்தி கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D K

ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் அவ்வப்பொழுது இடம் பிடித்து வந்தார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இவர் 2010 இல் பங்களாதேஷுக்கு எதிராக கடைசியாக விளையாடியுள்ளார் என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top