fbpx
Connect with us

விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. தினேஷ் கார்த்திக் பாராட்டும் படம் எது தெரியுமா ?

Dinesh Karthik F

News | செய்திகள்

விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. தினேஷ் கார்த்திக் பாராட்டும் படம் எது தெரியுமா ?

தினேஷ் கார்த்திக்

பல வருடங்களாக இந்தியா கிரிக்கெட் வட்டாரங்களில் கொண்டாடப்படும் விக்கெட் கீப்பர். ஸ்பின் பௌலிங்கில் சிறந்த பேட்ஸ்மேன். இதுமட்டுமன்றி சிறந்த பீல்டர் கூட. எனினும் தோனியின் கிரிக்கெட் காரியர் சமயத்தில் வந்தாலோ என்னவோ அணியில் நிரந்தர இடம் அமையவில்லை. இன்றளவும் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை மீண்டும் கம் பேக் கொடுத்தது இவராக தான் இருக்கும்.

எனினும் தற்பொழுது உள்ள இந்தியா டி 20 , மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் தன் பேட்டிங் வாயிலாக இடம் பிடித்துவிட்டார். நேற்று முடிந்த டி 20 தொடரிலும் இவர் ஆட்டம் அம்சமாகவே இருந்தது.

96

இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் வைரலாகி வருகின்றது.

“ரொம்ப அருமையான படம் 96 , எனக்கு அதிகம் பிடித்துவிட்டது. எனது பாவ்ரிட் ‘காதலே காதலே’ பாடல். அருமை. ஒவ்வொரு பிரேமும் பிடித்து விட்டது. பாடல்களும் சூப்பர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ” கடந்த சில நாட்களாகவே நான் விஜய் சேதுபதியின் பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். ஆனால் 96 சான்ஸே இல்ல, சூப்பரோ சூப்பர். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா அதைவிட்டார். காதலே பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

Dinesh karthi

Dinesh Karthik – Washington Sundar

வாஷிங்க்டன் சுந்தர், அபினவ் முகுந்த், பாசு (பிட்னஸ் ட்ரைனர்) இவர்களும் இப்படத்தின் பெரிய ரசிகர்கள் தான். ரவிச்சந்திரன் அஸ்வின் நீ எப்படி பா? ” என கேள்வியும் கேட்டுள்ளார்.

அஸ்வினின் பதில் என்னவாக இருக்குமென பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top