Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்காருக்கு போட்டியாக தீபாவளிக்கு துணிந்து களம் இறங்கும் திரைப்படங்கள்.? இந்த தீபாவளி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
வருடத்தில் மிக முக்கியமான பண்டிகை என்றால் தீபாவளி மற்றும் பொங்கல், இந்த பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீஸ் ஆகும், அதுவும் முன்னணி நடிகர் படமாகத்தான் இருக்கும், முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும்போது மற்ற நடிகர்களின் படம் வெளியானால் மிகவும் பாதிப்படையும் அதனால் யாரும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.
இந்த தீபாவளிக்கு எந்தெந்த திரை படங்கள் ரிலீசாக இருக்கின்றன என்பதை பற்றி பார்க்கலாம், வருகிற தீபாவளிக்கு அஜித்தின் விசுவாசம் சூர்யாவின் நெஞ்சிலே ஆகிய படங்கள் வெளியாக இருந்தன, ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் இந்த இரண்டு படங்களும் விலகிவிட்டன அதனால் விஜய்யின் சர்கார் மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சர்கார் படத்துடன் மோதுவதற்கு ஒரு சில படங்கள் களத்தில் இறங்குகின்றன தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா,பில்லா பாண்டி விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன், சசிகுமாரின் நாடோடிகள் 2, என சர்க்காருடன் 4 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நான்கு படங்களில் சர்காருடன் துணிந்து களம் இறங்கப் போவது யார் என்பதை தீபாவளிக்குப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
