fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தீபாவளி ரேஸில் பிகில், கைதி உடன் மோதும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்

bigil-sangatamilan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீபாவளி ரேஸில் பிகில், கைதி உடன் மோதும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்

தீபாவளி ரேஸில் பிகில் , கைதி உடன் மோதும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா, நாசர், அசுதோஷ் ராணா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சங்கத்தமிழன்.

விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜான் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரட்டை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் அதில் ஒரு வேடம் போலீஸ் வேடமாம்.

இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் உரிமையை கைப்பற்றியது. தீபாவளி ரேஸில் சங்கத் தமிழன் படம் குதித்துள்ளது.

விஜய்யின் புகழ் கார்த்தியின் கைதி படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top