India | இந்தியா
தொடர் மழை செய்த வினை.. பட்டாசு, துணி வியாபாரிகள் கலக்கம்
தீபாவளி வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். ஆனால் இந்த ஆண்டு தொடர்மழை காரணமாக பட்டாசு கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் நிலைமை மாறுமா பட்டாசு வியாபாரம் நடக்குமா ஏக்கத்தில் பட்டாசு வியாபாரிகள்.
பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு வியாபாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது என கூறுகிறார்கள். முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கும் முன்னே பல நிறுவனங்களில் கிப்ட் பாக்ஸ் ஆர்டர் செய்வதுடன் பெருநகரங்களில் கடை அமைக்க மொத்தமாக சிவகாசியில் ஆர்டர் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு மொத்த பட்டாசும் அப்படியே நிறுவனங்களில் தேங்கிப் போயுள்ளது. சென்னையில் பிரபல துணிக்கடையில் வியாபாரமே இல்லாமல் மந்தமாகவே உள்ளது.
துணிக்கடைகளில் விசாரித்த பொழுது இப்பொழுதெல்லாம் இளைஞர்களுக்கு ஆன்லைனிலேயே துணிகளை புக்கிங் செய்து கொள்கிறார்கள். கடைகளுக்கு வருவது மக்களிடம் குறைந்து விட்டது.
இது ஒருபுறமிருக்க மக்களிடம் ஏற்பட்டுள்ள பணப்புழக்கம் ஒரு பக்கம். பொருளாதார மந்தநிலை மாச கடைசியில் தீபாவளி அதுவும் ஒரே நாள் விடுமுறை மேலும் தொடர்மழை என இந்த வருட தீபாவளி பல வியாபாரிகளை கண்கலங்க வைத்துள்ளது.
