Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல தொகுப்பாளினி டிடி பளபளன்னு இருக்க இதுதான் காரணமாம்.. காசு இருக்குன்னு என்னவேணா பண்ணலாமா
சினிமா நடிகைகளை விட தொகுப்பாளராக இருக்கும் பெண்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தமிழ் தொகுப்பாளர்களில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.
ஆரம்பத்தில் சினிமா படங்களில் நடித்தாலும் அதன்பிறகு தொகுப்பாளராக தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார். இவருக்காகவே பல நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.
இந்நிலையில் மற்ற தொகுப்பாளர்கள் காட்டிலும் டிடி அழகில் அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். 35 வயது ஆனாலும் அது தெரியாத அளவுக்கு தன்னுடைய உடலை பராமரித்து வருகிறார்.
அதற்கு என்ன செய்கிறார் என்று கேட்கும்போது தான் நெஞ்சம் பதைபதைக்கிறது. அதாவது வாரத்திற்கு ஒரு முறை 25 முதல் 30 லிட்டர் பசும்பாலில் குளிக்கிறாராம் டிடி. இதை டிடியின் நெருங்கிய வட்டாரங்கள் கசியவிட்டு உள்ளன.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ஏழைகள் பலர் குடிக்க பால் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர், பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியெல்லாமா செய்வது என டிடியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இது உண்மையா? பொய்யா? என்பது டிடி வாயை திறந்தால் மட்டுமே தெரியும்.
