Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னம்மா இப்படி பண்ணிட்ட டிடியின் செயலால் அதிர்ந்த ரசிகர்கள்
வெயிலை சமாளிக்க டிடி வேட்டி, சட்டையுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சமமாக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் தொகுத்து வழங்கி நிகழ்ச்சி கண்டிப்பாக வைரல் ஹிட் தான். விஜய் டிவி வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்த டிடி, சிறிது காலம் எந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்தார். அப்போது, தனுஷ் இயக்கத்தில் பா. பாண்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் டைட்டில் கார்ட்டில் அவரை செல்வி.டிடி என படக்குழு குறிப்பிட்டு இருந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கணவருடன் உறவை முறித்து கொள்ள நீதிமன்ற படியேறினார் டிடி. இதனாலே, டிடி ரசிகர்கள் என்னய்யா நடக்குது இங்க என்ற மோடில் இருந்தனர்.
இத்தனை, சர்ச்சைக்கு இடையில் மீண்டும் விஜய் டிவி பக்கம் கால் பதித்திருக்கிறார். எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியில் அதிரடி சரவெடியாக டிடி தொகுத்து வழங்குவதை பார்க்க டிவி முன் ஒரு க்ரூப் ஆஜராவதை வாடிக்கையாக மாற்றி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியையும் டிடியே தொகுத்து வழங்க தொடங்கி விட்டாராம். இதெல்லாம் தெரிஞ்ச சேதி தானே இப்போ என்ன அதானே கேட்குறீங்க.

dd
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் டிடி வேட்டி மற்றும் சட்டையுடன் தொகுத்து வழங்கி இருக்கிறார். என்னம்மா ஏன் இப்படினு கேட்டா? அட வெயில சமாளிக்க வேற வழி தெரியுலையாம் பிள்ளைக்கு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
