திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்னாவை வச்சு செய்யும் முன்னாள் மனைவி.. திவ்யா ஸ்ரீதர் கொடுத்த பதிலடி

Bigg Boss Tamil 8 Arnav: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகிய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் சிலர் தந்திரமாக விளையாண்டு பெண்கள் அணியை கவுத்து கொண்டு வருகிறார்கள். அதிலும் பெண்கள் அணியில் இருக்கும் சில டம்மி பீஸ்கள் ஓவராக அழுது கொண்டே இருப்பதால் கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது.

தற்போது ஹோட்டல் டாஸ்க் போய்க்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பவித்ரா செய்த தவறுகளை ஆண்கள் சுட்டிக் காட்டியதால் அவருடைய போஸ்டிங் பறிபோய் விட்டது. இதற்கு உடனே பவித்ரா அழுதுவிட்டு ஆண்கள் என்னை டார்கெட் பண்ணி என் வேலையை காலி பண்ண வேண்டும் என்று பிளான் பண்ணி தான் இப்படி என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்று அழ ஆரம்பித்து விட்டார்.

இப்படி ஒவ்வொரு டாஸ்க்களிலும் ஆண்கள் அணி ஜெயித்து வருகிறார்கள். பெண்கள் அணி அழுது கொண்டே தோற்றுப் போகிறார்கள். இதற்கு இடையில் இரண்டாவது வார முடிவில் அர்னாவ் மக்களின் ஓட்டு கம்மியாக வாங்கி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் போகும் முன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் அர்னாவை வச்சு செய்யும் அளவிற்கு சில விருதுகளை கொடுத்து அசிங்கப்படுத்தினார்கள்.

இதனால் வெளியே வந்த அர்னாவ், விஜய் சேதுபதி முன் மொத்த வன்மத்தையும் கக்கும் அளவிற்கு ஜால்ரா பாய்ஸ் என்று சுட்டிக்காட்டி சில போட்டியாளர்களை சொல்லி கிண்டல் அடித்தார். இதனை பார்த்த விஜய் சேதுபதி இது உங்களுடைய வன்மத்தை காக்கும் இடமில்லை, அவர்களுக்கு அட்வைஸ் ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா மட்டும் தான் கேட்டேன் என்று அர்னாவின் திமிரை அடக்கி வெளியே அனுப்பினார்.

இப்படி அவமானப்பட்டு வெளியே வந்த அர்னாவை முன்னாள் மனைவி மற்றும் நடிகையுமான திவ்ய ஸ்ரீதர், வச்சு செய்யும் அளவிற்கு சில வீடியோக்களை போட்டு வருகிறார். தற்போது இந்த வீடியோக்கள் அனைத்தும் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்ல, எனக்கு கொடுத்தது டபுளாக உனக்கு திரும்பி விழும் அதுக்கு என்னடா பண்ணுவ என்று ரீல்ஸ் செய்து போட்டிருந்தார்.

தற்போது மீண்டும் வடிவேலுவின் பாஷையில் கிண்டல் அடிக்கும் விதமாக ” நான் அசிங்கப்பட்டேன், அவமானப்பட்டேன், வெட்கப்பட்டு வேதனைப்பட்டேன், துக்கபட்டேன், துயரப்பட்டேன், கஷ்டப்பட்டேன், இத்தனைப்பட்டும் இன்னும் திருந்தலையே எனும் காமெடியை ரீல்ஸாக செய்து பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனசாட்சியே இல்லாத அர்னாவ்க்கு இதை டெடிகேட் பண்றீங்களா என்று கேட்டு திவ்யாவிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இப்படி முன்னாள் மனைவி திவ்ய ஸ்ரீதர் வச்சு செய்யும் அளவிற்கு அர்னாவ், செல்லமா சீரியலில் ஹீரோயினுடன் சேர்ந்து திவ்ய ஸ்ரீதரை அழ அழ வைத்திருக்கிறார். அக்ஷிதாவும் அர்னாவ் உடன் சேர்ந்துதான் பிக் பாஸ்க்கு போனார். ஆனால் போனதுமே இரண்டு பேரும் மகா நடிகர்கள் என்று சொல்லும் அளவிற்கு நாங்கள் தப்பே பண்ணவில்லை. எங்களுக்குள் ஒண்ணுமே இல்லை என்று ஓவர் ஆக்டிங்கில் எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து நாமினேஷனில் அக்ஷிதா எப்பொழுது மாட்டுவார் அவரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வசமாக மக்கள் கையில் அக்ஷிதா சிக்கிவிட்டால் அவருடைய கெதியும் அர்னாவ் போல தான். இதுதான் முன்வினை செய்த பாவம் தொடர்ந்து வரும் என்று சொல்வார்கள். அதுதான் அர்னாவ் எங்கே போனாலும் கர்மா விடாமல் துரத்திக் கொண்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News