நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும். அதில் ஏதேனும் ஒன்றை முடிவு செய்து விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று ட்விட்டரில் சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவி வந்தது.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் நியூட்ரிஷியனிஸ்ட் (ஊட்டச்சத்து நிபுணர்). இந்நிலையில் திவ்யா சத்யராஜ் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த செய்தி வெறும் வதந்தியே என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வைரலாகும் குண்டு மனிதன் கெட் - அப்பில் வேலைக்காரன் வில்லன் ! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ உள்ளே !
Divya Satyaraj

அவர் கூறியதன் தமிழாக்கம் ” நான் சினிமாவில் நடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. அது உண்மையில்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக சென்னையில் இரண்டு கிளினிக்கில் பணியாற்றி வருகிறேன். மேலும் இதே துறையில் Ph D படித்துவருகிறேன். திரைப்படங்கங்களை பார்த்து ரசிப்பேனே தவிர படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை. ஊட்டச்சத்து சம்பந்தமான ஒரு ஆவண படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால் திரைப்படத்தில் நடிப்பது என் விருப்பம் அல்ல.’’ என்று விளக்கம் தந்துள்ளார் திவ்யா.