Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்முறையாக விவாகரத்தை பற்றி மேடையில் மனமுருகி பேசிய DD.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்
தமிழ் சினிமா மட்டும் சின்னத்திரையில் திருமணம் செய்துகொண்டு சில தினங்களில் விவாகரத்து செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. இதேபோல் தான் தற்போது நகர வாசிகளின் வாழ்க்கை நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது. காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்பு மன உளைச்சல், வெறுப்பு, சந்தேகம் ஆகியவை கண்களை மறைத்து விவாகரத்து வரை சென்று விடுகிறது.
சின்னத்திரையில் பிரபலமான திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே கூறலாம். அவர் விஜய் டிவியின் குடும்பத்தில் ஒருவராக வலம் வந்தார் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டு இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர், இதற்கு ஸ்ரீகாந்த் அதிக ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருப்பதால் நான் விவாகரத்து செய்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தை பற்றியோ தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று திவ்யதர்ஷினி வருத்தப்பட்டது இல்லையாம்.
அன்மையில் சிறந்த தொகுப்பாளினி விருது பெற்ற திவ்யதர்ஷினி மேடையில் மனமுருகி பேசியது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது, நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், கல்யாண உறவு பிரிந்து செல்லலாம், மற்ற எந்த உறவுகளும் நம்மளை விட்டு போகலாம்.
ஆனாலும் கூட வழக்கம்போல் காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு நாம் நேசிக்கும் வேலைக்கு கிளம்பினாள் உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்று மனமுருகி பேசியுள்ளார்.
