ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து பெரும் பிரபல நடிகை.. கோர்ட் படி ஏறிய கமலின் நாயகி

Jayam Ravi : சமீபகாலமாக ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுக்கும்படி பிரபலங்களின் விவாகரத்து செய்தி அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோரும் பிரிவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியது சர்ச்சையாகி வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த அலை ஓய்வதற்குள் பிரபல நடிகை ஒருவர் விவாகரத்து பெற போவதாக அறிவித்திருக்கிறார். தமிழில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்தவர்தான் ஊர்மிளா மடோன்கர். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அதிகமாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து பெரும் பிரபல நடிகை

kamal-urmila-matondkar
kamal-urmila-matondkar

ஊர்மிளா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் மோசின் அக்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் மோசின் ஊர்மிளாவை விட 10 வயது குறைவானவர்.

ஆனாலும் இருவருக்குள் இருந்த காதல் காரணமாக திருமணம் செய்து கொண்டனர். அதோடு அரசியலில் ஆர்வம் கொண்ட ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் 2019 ஆம் ஆண்டு இணைந்தார். இக்கட்சி சார்பில் போட்டியிட்ட நிலையில் அதில் தோல்வி அடைந்து விட்டார்.

அதன் பிறகு சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில் தனது கணவரிடமிருந்து விவகாரத்தை கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து கேட்டுள்ளதால் விரைவில் இவர்களுக்கு விவாகரத்து கிடைக்க வாய்ப்புள்ளது.

சர்ச்சையான ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து

- Advertisement -spot_img

Trending News