Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகளுக்காக ஃபைனான்ஸ் வாங்கி படம் எடுக்கும் நடிகை!
உலக நாயகனைப் பிரிந்த நடிகை தன் மகளை கதாநாயகியாக்க தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளாராம்.
முதல் கணவரைப் பிரிந்த நடிகை மீண்டும் இந்தியாவுக்கே வந்து உலக நாயகனுடன் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். பிரிந்ததுக்கு காரணம் உலக நாயகனின் மகளுக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட பிரச்னையே காரணம் என்று பேச்சு அடிபட்டது.

வாரிசு நடிகைக்கு போட்டியாக தனது மகளையும் ஹீரோயினாக்க நடிகை முடிவு செய்திருப்பதாகவும் சொன்னார்கள். தன் மகளை ஹீரோயினாக்க முயற்சி செய்து பயிற்சி கொடுத்துவரும் நடிகை அதற்காக கதையும் கேட்டு வருகிறார். வெளியில் தயாரிப்பாளர்கள் கிடைப்பது சிரமம் என்பதால் தானே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
இதற்காக சினிமாவுக்கு ஃபைனான்ஸ் தரும் ஃபைனான்சியர்கள் சிலரிடம் ஃபைனான்ஸ் கேட்டிருக்கிறாராம்.
புலியை பார்த்து…
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
