Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-actress-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

சம்பளத்தை இருமடங்காக உயர்த்திய விவாகரத்து நடிகை.. வரிசையாக கமிட்டாகும் படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக வலம் வரும் அந்த நடிகைக்கு தற்போது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கிறதாம். விவாகரத்துக்குப் பிறகு தற்போது முழு மூச்சாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமீபத்தில் நடித்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் நடிகை ஓகே சொல்லி வைத்திருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையே 10க்கும் மேல் இருக்குமாம்.

இப்படி வரிசையாக திரைப்படங்களை நடிகை கமிட் செய்வதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. என்னவென்றால் நடிகை தற்போது தன்னுடைய சம்பளத்தை மூன்றிலிருந்து ஐந்து கோடிக்கு உயர்த்தி விட்டாராம். திடீரென நடிகை இவ்வளவு அதிகமாக சம்பளத்தை உயர்த்தினாலும், அதைக் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

ஏனென்றால் நடிகை திருமணம், விவாகரத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் திரைத்துறையில் அவருக்கு இருக்கும் மவுசு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் அவர் கேட்ட பணத்தை தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

இதனால் இப்போதைக்கு திரையுலகில் விவாகரத்து நடிகை தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் நம்பர் நடிகை தன் காதலரை திருமணம் செய்துகொண்டது பல நடிகைகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த வகையில் விவகாரத்து நடிகையும் தற்போது நம்பர் நடிகையின் இடத்தை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார்.

Continue Reading
To Top