Tamil Cinema News | சினிமா செய்திகள்
கண்டுக்காத கோலிவுட்.. எல்லாரும் யூஸ் பண்ணிக்கிட்டு ஏமாத்திட்டாங்க என புலம்பும் நடிகை
விவகாரமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் சினிமாவை துவங்கி இருந்தாலும் அதன் பிறகு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த அந்த நாயகி தொடர்ந்து மசாலா படங்களிலேயே நடித்து வந்தார். இருந்தாலும் முன்னணி நாயகர்கள் தொடர்ந்து அந்த நடிகையுடன் ஜோடி போட்டனர்.
சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் போதே இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றார் அந்த நாயகி. ஆனால் சில வருடங்களிலேயே அந்த இயக்குனர் இவருக்கு சலித்து விட்டார் போல. உடனடியாக விவாகரத்தை பெற்றுக்கொண்டு தன்வழி சென்றுவிட்டார்.
அதன்பிறகு இவர் பிரபல நடிகருடன் இரண்டு பாகங்களாக உருவான படத்தில் நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதிலும் அந்த நெருக்கமான காட்சிகள் மாமனாரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அதற்காக அவரும் பல மேடைகளில் புலம்பினார். ஏன் அந்த நடிகர் தான் தன் மகனுக்கும் நடிகைக்கும் விவாகரத்துக்கு காரணம் என்று கூட சொல்லிவிட்டார்.
அந்த நடிகரும் சமீபத்திய பிரச்சனைக்கு பிறகு கிட்ட கூட சேர்க்க மாட்டேன் என்கிறாராம். கிளாமரில் களமிறங்கிய கதாநாயகி மொத்தமாக துணி இல்லாமலும் நடித்து பார்த்துவிட்டார். ஆனால் ரசிகர்கள் இவரை பார்க்க விரும்பவில்லை போல. இதனால் தற்போது கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடி வருகிறாராம் அந்த நாயகி.
இந்த சாக்கில் வடமாநில பாடகர் ஒருவரை உஷார் செய்து தற்போது அவருடன் தான் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறாராம். சமீபத்தில் அவர், கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற ரேஞ்சுக்கு எக்குதப்பாக அம்மணி ஒருவரை கட்டிப்பிடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால் விரைவில் அந்த வடமாநிலத்தவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் நாயகி. எத்தனை நாளைக்கு இந்த கல்யாணம் நீடிக்கும் என்று பார்ப்போம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அம்மணி கொஞ்சம் விவகாரமான ஆள்தான்.
