Rajinikanth_Vijay

விஜய் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக இருப்பது நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க இருப்பவர்கள் விஜய், அஜீத்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர்நாடகக்காரன் வேண்டாம், தமிழன் ஆளட்டும்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டரில் உள்ள செய்தி ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, திருச்சியில் பல தெருக்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.