திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. தந்தையால் அவதிப்படும் கங்குவா பட திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக நடிகை திஷா பதானி, ஹிந்தி சினிமாவில் டாப் நடிகையாக இருந்தாலும், தமிழில் முதல் முறையாக கங்குவா படம் மூலமாக தான் கதாநாயகியாக அறிமுகமானார். கிளாமரின் உச்சகட்டமாக போட்டோஸ் வெளியிடுவதில், இவரை வேற யாராலும் மிஞ்ச முடியாது என்று கூட கூறலாம்.

ஆனால் சமீப காலமாக சோகத்தில் மூழ்கியுள்ளார். ஏன் என்றால் இவருக்கு சோதனை காலமாக தான் சில மாதங்களாக உள்ளது. கங்குவா படத்தை பார்த்து நெகட்டீவ் விமர்சனங்கள் ஒருபக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம், இந்த படத்தில் திஷா பதானி தேவையே இல்லை என்ற கமெண்ட் அதிகமாக வந்தது.

வெறும் கிளாமர் டால் ஆக அவரை சிறுத்தை சிவா பயன்படுத்தினாலும், எனக்கும் ரோல் வேண்டும் என்று இவராவது கேட்டிருக்கலாம். இந்த நிலையில், படத்தின் விமர்சனத்தை பார்த்து மிகுந்த மாணவருத்தத்தில் இருக்கும் நடிகைக்கு வேற ஒரு பிரச்சனையை தலையில் இடியாய் இறங்கியுள்ளது.

அப்பாவால் வந்த புது பிரச்சனை

நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் பதானி ஓய்வுபெற்ற துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். அவருக்கு அரசு ஆணையத்தில் உயர் பதவி தருவதாக கூறி ஒரு மோசடி கும்பல் ரூ.25 லட்சத்தை ஒரு கும்பல் ஆட்டையை போட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசாங்க ஆணையத்தில் மதிப்பு மிக்க உயர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.25 லட்சம் கொடுத்ததாக நடிகையின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இரண்டு மாதத்துக்குள் உயர் பதவி கிடைக்கவில்லை என்றால் பணத்தை வட்டியும் முதலுமாக தருகிறோம் என்று அந்த கும்பல் கூறியுள்ளது. தந்தைக்கு பதவியும் கிடைக்கவில்லை, இப்போது பணமும் கிடைக்கவில்லை. திருப்பி கேட்டபோது, மோசமான முறையில் பேசியதோடு கொலை மிரட்டல் வேறு விடுத்திருக்கிறார்.

கோடி கோடியாக சம்பளம் வாங்கும் மகளின் தந்தைக்கு 25 லட்சம் ஒரு பெரிய அமௌன்ட் ஆ என்ன என்று ஒரு சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தாலும், பணம் பணம் தானே.

- Advertisement -

Trending News