Connect with us

Cinemapettai

முட்டி மோதிக் கொள்ளும் கனிமொழி, உதயநிதி.. அதிருப்தியில் நிர்வாகிகள்!

kanmozhi-udhayanithi

Tamil Nadu | தமிழ் நாடு

முட்டி மோதிக் கொள்ளும் கனிமொழி, உதயநிதி.. அதிருப்தியில் நிர்வாகிகள்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி பல தரப்பு கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி, முழு முனைப்புடன் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுகவினர் ‘விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்’ என்கின்ற பிரச்சார நிகழ்ச்சியை உருவாக்கி, அதை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் ஆதரவு கிடைக்கும் என்ற ஸ்டாலினின் எண்ணத்திற்கு எதிர்மாறாக தற்போது கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.

அதாவது வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவின் பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் திருச்சி சிவா, தயாநிதிமாறன், லியோனி என பலர் பங்கேற்க சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனினும், கனிமொழி, உதயநிதி நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கனிமொழிக்காக அவரது ஆதரவாளர்கள் ஒருபுறமும், உதயநிதிகாக கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் கட்சி நிர்வாகிகள் ஒருபுறமும் இருந்து வருகின்றனர். ஏனென்றால் போஸ்டர்கள், விளம்பரப் பதாகைகள், சுவர்கள், பத்திரிக்கை விளம்பரங்கள் அனைத்திலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் அழிக்கப்பட்டு வருவது கனிமொழி தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய தகவல்கள் ஸ்டாலினுக்கு தெரிந்ததும், அவர் மூத்த நிர்வாகிகளிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தி, முடிவை எடுத்துள்ளாராம். அதன்படி, ‘தேர்தல் நெருங்கும்  இந்த வேளையில் இதுபோன்ற உட்கட்சி பிரச்சினைகளை உடனடியாக  தீர்க்க வேண்டும்.

இதற்காக ஸ்டாலின் படத்தை தவிர வேறு எந்த படத்தையும் போஸ்டரில் விளம்பரத்தில் போட வேண்டாம்’ என்று நிர்வாகிகள் ஆலோசனை  கூறியுள்ளனராம். மேலும் இதன் அடிப்படையில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டாலும், தற்போது வரை விளம்பர விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.

அதுமட்டுமில்லாமல், விடியலின் குரல் நிகழ்ச்சி செலவுகள் அனைத்தும் கட்சி நிர்வாகிகள் தலையில் கட்டப்படுவதால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் வேட்பாளர் யார் என்று அறிவித்துவிட்டால் கூட பிரச்சார செலவு முழுவதையும் அந்த வேட்பாளர் ஏற்றுக் கொள்வதில் ஒரு நியாயம் உண்டு. ஆனா இப்போ தேவை இல்லாம எல்லாரும் செலவு பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கட்சியில் உள்ள நிர்வாகிகள் செம்ம கடுப்பில் உள்ளாராம்.

அதோடு இந்த நிகழ்ச்சிக்காக செலவழித்த பெரும் பொருட்செலவில் திமுகவில் உள்ள 95% நிர்வாகிகளுக்கும் மேல் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனை தலைமை விரைவில் புரிந்துகொண்டு செயல்படாவிட்டால் கட்சிக்கு பிரச்சனைதான் என்று கூறப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top