உஷார்.. ஆண்களை மட்டுமே அதிகமாக பாதிக்கும் நோய்கள்
பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு பல்வேறு நோய்கள் மூலம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்களை மட்டும் பாதிக்கும் நோய்கள் என்ன?
- ஆண்களின் உடலில் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியானால், அது ஆண்களுக்கு அடிக்கடி காய்ச்சலை ஏற்படுத்தும்.
- பெண்களை விட ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் அதிகமாக பாதிக்கிறது.
- பெண்களை விட ஆண்கள் ஆட்டிச நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பிறக்கும் போது அதிகளவு சாம்பல் நிற திசுக்களை கொண்டிருப்பது தான் காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
- டைப்-2 நீரிழிவு நோயானது பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது என்று ஆராய்ச்சி செய்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
- சிறுநீரக நோய்களானது பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சந்திக்க நேரிடுகிறது. ஏனெனில் இதற்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, சரியான அளவு நீரைப் பருகாமல் வேலை செய்வது முக்கிய காரணமாக உள்ளது.
- பெரும்பாலான ஆண்கள் இதய நோயால் அதிக இறப்பை சந்திக்கின்றனர். ஏனெனில் இதற்கு ஆண்களின் உணவுப் பழக்கம் மற்றும் இதர பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
