theri vijayஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்னும் இந்த படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு பெண்டிங் இருப்பதாகவும், எனவே பொங்கலுக்கு பின்னர் சுமார் பத்து நாட்களுக்கு ‘தெறி’யின் படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தல, தளபதி முதலில் யார்? - இளம் இயக்குனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

மேலும் ‘தெறி’ படத்தின் முழு படப்பிடிப்புகளும் முடிந்த பின்னரே இந்த படத்தின் டீசரை வெளியிட இயக்குனர் அட்லி முடிவு செய்திருப்பதாகவும், எனவே வரும் பொங்கல் தினத்தில் ‘தெறி’ படத்தின் டீசர் மற்றும் வேறு எந்தவித புரமோஷனும் வெளிவரவாய்ப்பு இல்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தளபதி சர்கார் மற்றும் சூப்பர் ஸ்டார் 2.0 படங்களுடன் போட்டி போடப் போவது யார்?

விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.