சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷிட் கிடைப்பது சாதரண விஷயம் இல்லை. மூன்றாவது படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைக்க, கபாலியை வெற்றிகரமாக முடித்து செம்ம குஷியில் உள்ளார்.

இவர் இந்த வாரம் ஒரு வார இதழக்கு பேட்டியளித்துள்ளார். இதில் ரஜினி சார் எப்போதும் டப்பிங் பேசும் போது எந்த இயக்குனரையும் உள்ளே அனுமதிக்கமாட்டாராம்.

அதிகம் படித்தவை:  ரஜினியுடன் நடிக்க மறுப்பதற்க்கு இதான் காரணம் - கமல்ஹாசன் பதில்

மணிரத்னம் மட்டுமே சண்டைப்போட்டு உள்ளே இருந்துள்ளார், அதன் பின் ரஞ்சித் மட்டுமே டப்பிங் ஸ்டுடியோவில் இருந்துள்ளார்.

மேலும், முதல் நாள் பேசியதை மறுநாள் பேசமாட்டேன் என கூறியுள்ளார், டப்பிங் எல்லாம் முடிந்து ஒருநாள் சார் மீண்டும் அந்த வசனத்தை பேசுங்கள் என்று ரஞ்சித் கூற, ரஜினி சிரித்துக்கொண்டே, “சார் நீங்க பெரிய ஆளு தான்” என்று கூறினாராம். அதுமட்டுமின்றி என்னை கொடுமைப்படுத்திய 3 இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என செல்லமாக கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  தீபாவளிக்கு வெளியாகவில்லை ரஜினி படம்!

ரஜினி சொல்வதை வைத்து பார்த்தால் ஒருவர் ரஞ்சித் மற்றொருவர் மணிரத்னம் மூன்றாவது யாராக இருக்கும்….?.