காத்து கிடக்கும் இயக்குனர்கள்.. நூறு கதை கேட்டு வெறும் 8 படத்துக்கு ஓகே சொன்ன நடிப்பு அரக்கன்

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் கதை கேட்டு ஒரு படத்தை ஓகே பண்ணுவது எல்லாம் இலகுவாக இருந்தது. ஆனால் இப்போது சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட ஒரு கதையை ஓகே செய்வதற்கு முன்பு நாற்பது, ஐம்பது கதைகளை கேட்டு தான் முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில் தமிழில் ஆரண்ய காண்டம், கடல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் குரு சோமசுந்தரம். பல விருதுகளை தட்டி பறித்த இந்த திரைப்படத்திற்கு பிறகு குரு சோமசுந்தரம் பலராலும் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.

இவர் தற்போது தமிழில் மாமனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தாலும் மலையாள திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் இவரின் நடிப்பில் மலையாளத்தில் மின்னல் முரளி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் இவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஹீரோவாக டேவினோ தாமஸ் நடித்திருந்த அந்த திரைப்படம் சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் பாராட்டை பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.

இதனால் குரு சோமசுந்தரத்திற்கு மலையாள திரையுலகில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்போது அவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டாராம். அதில் கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 8 கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

இதுபற்றி கூறிய அவர் அந்த 100 கதைகளும் மிகவும் சவாலான கதைகளாக இருந்தது. அதில் 8 கதைகளை தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது தேர்ந்தெடுத்துள்ள அந்த கதைகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் இப்போது மலையாளத்தில் மாறி மாறி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இதை வைத்துப் பார்த்தால் தற்போது இவர் தமிழ் சினிமா பக்கமே வர மாட்டார் என்றுதான் தோன்றுகிறது அந்த அளவுக்கு மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு நடிகராக மாறியிருக்கிறார். இந்த நடிப்பு அரக்கனுக்காக தமிழில் பல இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்