ஒன்னு அரசியலை பாருங்க, இல்ல சினிமாவை பாருங்க.. பாடாய்படுத்தும் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் என்னதான் அரசியல் வாரிசாக இருந்தாலும் அவரது பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது என்னமோ சினிமாவில் நடித்த பிறகுதான். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற முதல் படமே பம்பர் ஹிட் அடித்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஜேஷ் மற்றும் சந்தானம் கூட்டணி தான். முதல் படம் வெற்றி அடைந்தவுடன் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமா ஆசை வர தொடர்ந்து சொந்த தயாரிப்பில் படங்களில் நடித்து வந்தார். முதலில் தயாரிப்பாளராக தான் சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

ஒரே மாதிரியாக படங்கள் பண்ணிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன், நிமிர் போன்ற படங்களுக்குப் பிறகு ஓரளவு கவனிக்கப்படும் நடிகராகவே மாறிவிட்டார். அதிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், மகிழ்திருமேனி என அனைவரையும் ஒரு படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்து வைத்தார்.

இடையில் திடீரென தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகிவிட்டார். தற்போது பெரும்பாலும் அரசியலே கதி என்று இருப்பதால் அவரை நம்பி காத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு அடுத்த கட்டம் என்ன என்பதே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் திட்டமிட்டபடி அவர்களால் மற்ற படங்களையும் இயக்க முடியாமல் போய்விட்டது என வருத்தத்தில் இருக்கின்றனர். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் படமும் செய்ய முடியாமல் அரசியலிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இடியாப்ப சிக்கலில் மாட்டித் தவிக்கிறாராம்.

udhayanidhi-stalin-cinemapettai
udhayanidhi-stalin-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்