Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘தி பேமிலி மேன் 2’ தமிழர்களுக்கு எதிரானதா.? பிரபல இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே விளக்கம்
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் அமேசான் தளத்திற்காக உருவாக்கப்பட்டதே “த ஃபேமிலி மேன்”. முதல் பார்ட் செம்ம ஹிட் அடிதத்தது. ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய வெப் சீரிஸ். மிடில் க்ளாஸ் ஆசாமி, ஆனால் உளவாளியாக வேலை பார்க்கும் ஹீரோ ஸ்ரீகாந்த் திவாரி அன்றாடம் சந்திக்கும் சவால்களை இந்த சீரிஸ் சொல்லியது.
முதல் பார்ட் ISIS தீவிரவாதிகள், பாம் மற்றும் ஹீரோவின் குடும்ப வாழைக்கையை மையப்படுத்தி இருந்தது. இந்த தொடரின் இரண்டாவது சீசன் வாயிலாக சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். சமீபத்தில் THE FAMILY MAN 2 ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. தமிழர்களின் செண்டிமெண்ட் இதில் கேள்விக்குறியாக உள்ளதாக பலர் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் தமிழ் மக்கள், கலாச்சாரம் மீது அதிக மரியாதை உள்ளது என ட்ரைலர் சர்ச்சை பற்றி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே சொல்லியுள்ளனர்.

Raj Nidimoru and Krishna D.K.
“நாங்கள் இந்த சீரிஸை அதிகம் விரும்பி எடுத்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விதமாக இந்த சீசன் இருக்கும். இது கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கானது தான். இந்த புதிய சீசன் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஒன்றாக காட்டும். முதல் சீசன் கதாபாத்திரங்களோடு தமிழ் சினிமாவில் பாப்புலராக இருக்கும் பல பிரபல நடிகர்கள் இந்த 2ம் சீசனில் நடித்துள்ளனர்.
இதில் ஒரு தைரியமான ரோலில் நடித்ததன் மூலம் சமந்தா அக்கினேனியும் டிஜிட்டலில் களமிறங்கி இருக்கிறார். சமந்தா மொழியை சரியாக உச்சரிப்பதற்காக க்ளாஸ் எடுத்துக்கொண்டார், மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு அனைத்து சண்டை காட்சிகளிலும் அவரே நடித்தார்.
ட்ரெய்லரில் வரும் சில ஷாட்களை மட்டும் பார்த்துவிட்டு பல்வேறு விஷயங்களை யூகித்துகொள்கிறார்கள். இதில் நடித்த நடிகர்கள் மற்றும் பணியாற்றிய குழுவில் இருக்கும் முக்கியமான நபர்கள் தமிழர்கள். நாங்கள் தமிழ் மக்களின் செண்டிமெண்ட் மற்றும் கலாச்சாரம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு தான் இதை எடுத்தோம். தமிழ் மக்கள் மீது எங்களுக்கு அதிகம் அன்பு மற்றும் மரியாதை இருக்கிறது.”
ஜூன் 4ம் தேதி இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
