தமிழ் சினிமாவில் புது முயற்சிகள் எடுக்க நினைக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே. தொழில்நுட்பத்தில் புதுமைகள் படைக்கும் பல இயக்குனர்கள் இங்கு ஏராளமாக பெருகி வருகின்றனர். ஆனால் கதையிலும், கதாபாத்திரங்களிலும் புதுமைகள் செய்கிறவர்கள் வெகு குறைவு.

அவ்வரிசையில் இயக்குனர் ராம் அவர்கள் தரமணிக்கு பிறகு தான் இயக்கபோகும் பேரன்பு என்னும் படத்தில் புதுமை மட்டுமல்ல புரட்சிகரமாகவும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ‘பேரன்பு’ படம் குறித்த தகவல்கள் வந்துகொண்டுதான் உள்ளன. அதன் தொகுப்பே இப்பதிவு.

இந்த படத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் படத்தில் மகளாய் நடித்த சாதனா போன்றோர் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் யுவன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்துவிட படக்குழு .

அதிகம் படித்தவை:  இருட்டு அறையில் முரட்டு குத்து மொக்க லவ் வீடியோ சாங்.!

சரி படத்தினை பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ உங்களுக்காக

  • இது ஒரு அப்பா மகள் சம்பந்தப்பட்ட கதை
  • முதலில் பாடல் வரிகள் எழுத ஒப்பந்தமானவர் நா.முத்துகுமார், ஆனால் அவர் இறந்ததால் வேறு ஒருவரைக் கொண்டு பாடல் வரிகளை எழுத திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் இந்த படத்திற்காக முத்துகுமார் ஆரம்பத்தில் எழுதிய சில வரிகளை பாடலாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
  • இந்த படத்தில் நடிகை அஞ்சலி தவிர மம்முட்டிக்கு இரண்டாம் கதாநாயகியாக அஞ்சலி அமீர் என்பவர் நடிக்கிறார். இவர் பிறப்பால் ஒரு ஆண். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியவர்.
  • முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்த அஞ்சலி அமீரை கதாநாயகியாக சிபாரிசு செய்தவர் மம்முட்டி
அதிகம் படித்தவை:  பல பாடல்களின் கலவையில் வெளிவந்த தமிழ்படம்2 படத்தில் சிவாவின் அறிமுக பாடல்.!

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்கபடுகிறது.

நம் சமூகத்தில் திருநங்கைகளுக்கென கழிப்பறை, கல்வி, வேலை, சமூக உரிமை என்று படிப்படியாய் திருத்தங்கள் நடந்துவரும் வேளையில் ராமின் இந்த புது முயற்சி தமிழ் சினிமாவில் ஒரு மயில் கல்லாய் கட்டாயம் இடம்பெறும்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சூப்பர் ராம்!!!