Rajini : நேற்று வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினி பலரும் அதிர்ச்சி அடையும்படி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தொடர் தோல்வி கொடுத்து வந்த ரஜினிக்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதன் பிறகு அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் வருகின்ற ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ள நிலையில் புரமோஷனை இப்போதே தொடங்கி இருக்கின்றனர். மேலும் ரஜினி மேடையில் பேசிய நிலையில் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ப இயக்குனர்கள் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ரஜினியின் பேச்சால் அதிருப்தியான இயக்குனர்கள்
அதாவது ஒரு மிகப்பெரிய வெற்றி கொடுத்த பின் அடுத்த வெற்றி படத்தை கொடுப்பதை காட்டிலும் தோல்விக்குப் பிறகு வெற்றி படம் கொடுப்பதே ரொம்ப கஷ்டம் என்று ரஜினி கூறியிருக்கிறார். அப்படி என்றால் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு திறமை இல்லையா என ரஜினியின் கருத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதுவும் தமிழ் சினிமாவை காட்டிலும் மற்ற மொழியில் உள்ள டாப் ஹீரோக்களும் லோகேஷின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் ரஜினியின் கூலி படத்தை லோகேஷ் தான் இயக்கி வருகிறார். நெல்சன் ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு இளம் இயக்குனர்கள் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது தான் சில படங்களின் தோல்விக்கான காரணமாக இருக்கிறது.
வேட்டையனின் வேட்டை ஆரம்பம்
- ரஜினி, விஜய்க்கு மண்டையில் கொட்டு வச்ச அரவிந்த்சாமி
- ரஜினி பொண்ணுக்கு நாக்குல தான் சனி
- கூலி, ஜெய்லர் 2 படம் ரிலீஸ் தேதியை ஸ்கெட்ச் போட்ட ரஜினிகாந்த்