படம் பண்ணுவதை நிறுத்திய 5 சூப்பர்ஹிட் இயக்குனர்கள்.. ஹீரோக்களை வளர்த்து விட்டும் பிரயோஜனம் இல்ல

திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக மாறுவது புதிதல்ல. அப்படி இயக்குனராக இருந்து நடிகர்களாக பிரபலமான ஐந்து இயக்குனர்கள், தாங்கள் இயக்கிய படங்களில் வளர்த்து விட்டும் நடிகர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து, அவர்களே களத்தில் இறங்கி நடித்து சினிமாவில் தங்களுக்கான இருப்பை ஆழமாகப் பதிவு செய்துகொண்டனர்.

அமீர்: மதுரை மைந்தனான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே, ஜீவாவின் ராம், கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன், ஜெயம் ரவியின் ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். திடீரென்று அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் யோகி, யுத்தம் செய், வட சென்னை, மாறன் போன்ற படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி இயக்குனராக இருந்ததைவிட நடிகராக ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

ராம்: 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு தங்க மீன்கள் படத்தில் கதாநாயகனாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பெரும்பாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேடித் தேடி இயக்குகிறார் தரமணி, பேராண்மை போன்றவை இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள்.

கரு பழனியப்பன்: 2003ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பிறகு பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம், நட்பே துணை என வரிசையாக பல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்தவர். இவர் மந்திரப்புன்னகை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மேலும் பிரபலம் அடைந்தார். சிறந்த பேச்சாளரான இவர் தற்போது ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சசிகுமார்: சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய எதார்த்தமான கதையம்சம் நிறைந்த படங்களை கொடுப்பவர் இயக்குனர் சசிகுமார். இவர் 2008 ஆம் ஆண்டு அவரே இயக்கி தயாரித்த சுப்ரமணியபுரம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஈசன் என்ற படத்தையும் இயக்கி இருப்பார். ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி அதன் பிறகு முழுநேர கதாநாயகனாக நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரைதப்பட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.

எஸ் ஜே சூர்யா: இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தல அஜித்தின் வாலி, தளபதி விஜய்யின் குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி, அவர்களுடைய திரை வாழ்க்கைக்கு அச்சாரமாக இருந்தார். பொதுவாக இவர் இயக்கும் படங்களில் எல்லாம் சிறு சிறு வேடத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

அதுவே பின்னாளில் அவர் 2007 ஆம் ஆண்டு வெளியான வியாபாரி, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமாக்க செய்தது. கதாநாயகனாக மட்டுமல்லாமல் தளபதி விஜயின் நண்பன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், மெர்சல் படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருப்பார். இப்படி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டுகிறார் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது

இவ்வாறு இந்த ஐந்து இயக்குனர்களும் இயக்குனர்களாக இருந்து நடிகர்களை வளர்ந்து விடுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து, அதன் பிறகு அவர்களே நடிகர்களாக மாறி தங்களுக்கென்று ரசிகர் வட்டத்தை பெருக்கி கொண்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்