Connect with us
Cinemapettai

Cinemapettai

vignesh-shivan-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவனின் நடவடிக்கையால் எரிச்சலான இயக்குனர்கள்.. போற போக்க பார்த்த நயன்தாராவுக்கு ஆப்பு உறுதி!

தற்போது கோடம்பாக்கத்தையே அதிர விடும் காதல் ஜோடி தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்கள் இருவரும் தங்களுடைய ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து  பல இளசுகளை பொறாமைப்பட வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் நயன்தாரா தற்போதெல்லாம் அதிகமாக பேட்டி அளிக்காமல் இருப்பதால் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் நயன், படப்பிடிப்பிலும் இருக்குமிடம் தெரியாமல் அடக்கமாக நடந்து கொள்வதால் தயாரிப்பாளரோ இயக்குனரோ நயனை பற்றி இதுவரை எந்த குறையும் சொன்னதில்லை.

ஆனால் தற்போது நயன்தாராவின் பெயரை கெடுக்கும் விதமாக நயனின் காதலர் செய்யும் அட்டூழியங்களால் இயக்குனர்கள் வெறுப்பாகி இருக்கின்றனர்.

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்காக கதை கேட்பது கால்ஷீட் பார்ப்பது போன்றவைகளை செய்து கொண்டிருப்பதையும் தாண்டி,  அதற்கு ஒரு படி மேலாக டெக்னீஷியன்களை முடிவு செய்வது, அவர்களிடம் இயக்குனருக்கும் மேலாக படம் பற்றி ஆலோசனை செய்வது போன்ற பல விஷயங்களில் விக்னேஷ் ஈடுபட்டு வருகிறாராம்.

இதனால் பல இயக்குனர்கள் எரிச்சல் அடைந்து உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த தகவலை கேட்ட பலர், ‘இப்படியே போனா நயன் மேடமுக்கு ஆப்பு தயாராகிவிடும். சீக்கிரமே யாராச்சும் நயன்தாராவிடம் இதை சொன்னா பரவால்ல’ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

vignesh-shivan-nayanthara

vignesh-shivan-nayanthara

Continue Reading
To Top