தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் அஜித்தை இயக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பம் ஒரு சில படங்களையே இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு சீக்கிரமாகவே நடந்தது.

மங்காத்தா என்ற மாஸ் ஹிட்டை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என பலரும் காத்திருக்கின்றனர், வெங்கட் பிரபுவை பார்க்கும் போதெல்லாம் பலரும் கேட்கும் கேள்வி இதுதான்.

இதற்கு வெங்கட் பிரபுவின் பதில் ‘நான் எப்போதும் ரெடி தாங்க, பர்ஸ்ட்டு தல ஓகே சொல்லட்டும், படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்’ என கூறியுள்ளார்.

இதே போல் ஏ.ஆர் முருகதாசும் அஜித் ஒகே சொன்னால் நாளைக்கே ஷூட்டிங் போய்டலாம் என்று கூறியிருந்தார்.