Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தானே கலாய்த்த சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர். செம்ம சார் நீங்க ?
விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் கமெர்ஷியல் சினிமா, ஜனரஞ்சக சினிமா என்று அசத்துபவர். இவர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.
தியாகராஜன் குமாரராஜா

Fahad Fasil – Thiyagarajan Kumararaja – Samantha
ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் எடுக்கும் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்க்கின் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

super deluxe
படம் ஆரம்பம் முதல் பல தடைகள், சோதனைகள் என தாண்டி , தற்பொழுது போஸ்ட் ப்ரொடொக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். இந்த போஸ்டர் நேற்று வைரலானது .
#SuperDeluxe Official Vadivelu version #சூப்பர்டீலக்ஸ் #SuperDeluxeFirstLook @Superdeluxethemovie pic.twitter.com/TfRqJU7SPD
— Itisthatis (@itisthatis) October 8, 2018
இந்நிலையில் போஸ்டர் வெளியான சில நேரம் கழித்து இயக்குனர் சூப்பர் டீலக்ஸ் படத்தின் அதிகாரபூர்வ வடிவேலு வெர்ஷன் போஸ்டர் என ஒன்றை வெளியிட்டார்.

Super Deluxe vadivelu version
தன் போஸ்டரை கலாய்த்து அடுத்தவர் மீம்ஸ், இது ஹாலிவுட் போஸ்டரின் தழுவல் என பதிவிடுவதற்கு முன் இயக்குனரே இது போல் செய்ததை நெட்டிசன்கள் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர்.
