கமல் சூர்யாவை மாட்டிவிட்டு வம்புக்கு இழுத்த இயக்குனர்!

குருவி உட்கார்ந்தா கோபுரம் தாங்கும். கோபுரம் உட்கார்ந்தா குருவி தாங்குமா? கமல்ஹாசனும், சூர்யாவும் இரு பெரும் கோபுரங்களாக லிங்குசாமி தலையில் உட்கார… லிங்குவின் சாம்ராஜ்யம் தமிழ்சினிமாவில் இல்லாமலே போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட அவரை இன்டஸ்ட்ரி மறந்தே போன நிலையில் கல்யாண விருந்தில் தலைவாழை இலையை குப்புற கவுத்துப் போட்ட மாதிரி, எல்லாவற்றையும் கவுத்துப் போட்டு, கலவரத்தை தூண்டியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, இடம் பொருள் ஏவல் என்ற இடத்தை இவர் இயக்கி முடித்து ரிலீசுக்கு ரெடி செய்து மூன்று வருஷத்துக்கும் மேலாச்சு. நடுவில் வந்த அஞ்சான் மற்றும் உத்தம வில்லன் படங்களால் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்ட லிங்குசாமி, இந்தப்படத்தை வெளியிட முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டார். நடுவில் பஞ்சாயத்தை கூட்டிய இன்டஸ்ட்டிரி பெரிய மனிதர்கள், கமல் மீண்டும் லிங்குவுக்காக பத்து கோடியை குறைத்துக் கொண்டு கால்ஷீட் கொடுப்பது என்றும் அந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து தருவது என்றும் தீர்ப்பளித்தார்கள். இப்போது கமல் சொன்னபடி கால்ஷீட் கொடுத்தால், லிங்குசாமியின் அடைபட்ட கதவுகள் திறக்கும்.

இடம் பொருள் ஏவல் படமும் திரைக்கு வரும். இது ஒருபுறமிருக்க, தன் வேதனையை ட்விட்டரில் கொட்டி, அந்த ஏரியாவையே சூடாக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. இடம் பொருள் ஏவல் வர வேண்டும் என்றால் அய்யா கமல்ஹாசனும் அஞ்சான் சூர்யாவும் மனசு வைத்தால்தான் ஒருவேளை வெளிவரலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனால் என்ன புண்ணியம்? மறந்து போன லிங்குசாமியை மறுபடியும் நினைவூட்டிய புண்ணியம். அதை தவிர வேறு சிங்கிள் மாட்டுக் கறி பீஸ் கூட இதனால் கிடைக்காது என்பதுதான் இப்போதைய நிலவரம்.

Comments

comments

More Cinema News: