Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகைகளை ஆபாசமாக பேசிய பிரபல இயக்குனர்.. போலீசில் புகார் அளித்த செம்பருத்தி
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் செம்பருத்தி நாடகத்திற்கான படப்பிடிப்பு மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடப்பது போல் படப்பிடிப்பு நடந்தது.
இதில் நடித்த துணை நடிகைகள் சரியாக நடிக்கவில்லை என்று கோபமடைந்த இயக்குனர் நீராவி பாண்டியன் துணை நடிகைகளை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து போன துனை நடிகைகள் படப்பிடிப்பை புறக்கணித்து விட்டு 20 க்கும் மேற்பட்டோர் இரவு திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்று நாடக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரையடுத்து திருவேற்காடு போலீசார் நாடக இயக்குனர் நீராவி பாண்டியனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். மேலும் குடும்ப சூழ்நிலைக்காக தான் துணை நடிகைகளாக படப்பிடிப்புக்கு வருகிறோம்.
எங்களுக்கு இதுபோன்ற ஆபாசமான வார்த்தைகளை கேட்க வேண்டும் என்பது இல்லை இனி இதுபோல் இவர் எந்த பெண்களிடமும் பேசக்கூடாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து துனை நடிகைகளிடம் ஆபாசமாக பேசியதற்கு இயக்குனர் மன்னிப்பு கேட்டதால் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
