எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் ‘நீயா நானா’ என்று போட்டி போட ஆரம்பித்து அது ட்விட்டரின் ட்ரெண்ட்டிங்கில் வந்து நிற்கிற அளவுக்கு மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் விஜய் – அஜித் ரசிகர்கள்.

விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தால் அதை அஜித் ரசிகர்கள் விடிய விடிய ட்விட்டரில் கலாய்ப்பதும், அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தால் அதை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட்டிங்கில் போட்டு நாறடிப்பதும் தொடர்கதையாகி விட்டது.

அதிகம் படித்தவை:  அஜித் அடுத்த படம் இதுதான் - அதிகாரப்பூர்வ தகவல்

வார்த்தை விளையாட்டு அதோடு நின்றால் பரவாயில்லை.

அஜித் ரசிகர்கள் அஜித்தை புகழ்ந்து ‘தலயும் வாத்யாரும்’ என்று படம் எடுக்கிற லெவலுக்கு இறங்க, பதிலுக்கு விஜய் ரசிகர்களும் ‘4 ரசிகர்கள்’ என்று படம் எடுக்க கிளம்பி விடுகிறார்கள்.

இப்படி இந்த இரண்டு பேரின் ரசிகர்களின் வாய்க்காத் தகறாரையும் முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் ஒருவர்.

ஆமாம், விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடுகிறார்கள் என்ற ஓர் உயர்ந்த நோக்கம் கொண்ட கதையை ‘விசிறி’ என்கிற டைட்டிலோடு எடுத்து வருகிறாராம் ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.

அதிகம் படித்தவை:  லீக்கானாலும், வேகம் குறையாத விவேகம்! எப்போதுமே தல ஒன் மேன் ஆர்மி தான்

இந்தப்படம் வந்தால் விஜய்- அஜித் இரண்டு பேரின் ரசிகர்களும் கண்டிப்பாக சண்டை போட மாட்டார்கள். மாறாக எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையோடு செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்” இது சவால் என்கிறார் வெற்றி மகாலிங்கம்.