fbpx
Connect with us

Cinemapettai

தர்பார் பற்றிய விமர்சனம்.. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! வைரலாகுது இயக்குனர் சுசீந்திரனின் பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் பற்றிய விமர்சனம்.. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! வைரலாகுது இயக்குனர் சுசீந்திரனின் பதிவு

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தர்பார் வெளிவந்த தினத்தன்று முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சரியில்லை என்ற ரீதியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் படத்தை பார்த்த பொதுமக்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பக்கா மாஸ் கமெர்ஷியல் வகையறா. ஹவுஸ் புல் காட்சிகள் தான் அணைத்து திரை அரங்குகளிலும். குடும்பமாக படத்தை சென்று ரசிக்கின்றனர்.

இந்நிலையில் படம் பார்த்த பின் இயக்குனர் சுசீந்திரன் தன் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் லெட்டர் பேட்டில் பின்வருமாறு எழுதியுள்ளார் …

“லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’தர்பார்’ படம் குறித்து சில பேர் வேண்டுமென்றே தவறான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து இந்த பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன். நான் தந்த டிக்கெட் பணத்திற்கு முதல்பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன்.

கோமாளி படத்துக்குப் பிறகு யோகிபாபு ரஜினி சாருடன் இணைந்து கொண்டாட்டமான படத்தைத் தந்துள்ளார். ரஜினி சாருடைய மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ் எதார்த்தமான க்யூட்டான நடிப்பு. எமோஷனல் காட்சியில் சூப்பர் நடிப்பு. அனைவருமே குடும்பத்தினருடன் தியேட்டர் சென்று பாருங்கள். மிகவும் சுவாரசியமான திரைப்படத்தை ’தர்பார்’ குழுவினர் தந்துள்ளனர்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top