Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்.. அட்லியை மறைமுகமாக கிழித்த சுந்தர் சி
தயாரிப்பாளர்களை பற்றி கவலைப்படாமல் பெரிய ஹீரோ என்பதற்காக பிரமாண்டம் என்ற பெயரில் அளவுக்கதிகமாக செலவுசெய்து தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுகிறார்கள் என தனது மறைமுக பேச்சினால் அட்லியை அடித்து ஓட விட்டிருக்கிறார் சுந்தர் சி.
விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆக்சன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சுந்தர் சி பேசியதாவது, தற்பொழுது வரும் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைத்ததும் தயாரிப்பாளர்களின் நிலைமையை மறந்து பெரிய ஹீரோக்களுக்கு ஜால்ரா அடிப்பதையே வேலையாக வைத்துள்ளார்கள்.
பெரிய ஹீரோ என்பதனால் தேவையில்லாமல் ஒரு ஷாட்டுக்கு 2000 ஆர்ட்டிஸ்டுகள் என பிரம்மாண்டத்தை கூட்டி செலவு அதிகரித்து விடுகிறார்கள். அதேபோல் ஷூட்டிங்கும் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பது இல்லை. ஆகையால் தயாரிப்பாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதை சுட்டிக்காட்டியுள்ளார் சுந்தர் சி.
இவர் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான செலவுகளால், அதே நிறுவனம் சுந்தர் சி-யை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருந்த சங்கமித்ரா திரைப்படம் கைவிடப்பட்டது.
இதனால் சுந்தர் சி காண்டில் பேசி இருப்பார் எனவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர். இருந்தும் அவர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் அவரது கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
