Tamil Cinema News | சினிமா செய்திகள்
25 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு மனுஷன பார்த்ததில்லை.. சுதா கொங்கராவின் அதிரடியான பேட்டி, வைரலாகும் பதிவு!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுதா கொங்கரா. அதன்பின் இவர் மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக ஜொலித்தார். இந்த நிலையில்தான் இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் குடிகார அப்பாவாக நடித்த குணச்சித்திர நடிகரான காளி வெங்கட்டைப் பற்றி பெருமிதத்துடன் பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா கருத்து பதிவிட்டுள்ளார்.
ஏனெனில் சுதாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் காளி வெங்கட் நடித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது காளி வெங்கட் ஒரு பக்க வசனத்தை அப்படியே படித்து சூர்யாவைப் போல் பேச, சூர்யா காளி வெங்கட்டின் நடிப்பை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பளித்தாராம்.
மேலும் அந்தக் காட்சி முடிந்ததும் சூர்யா ‘எனது 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மனுஷன பார்த்ததில்லை’ என்று காளி வெங்கட்டை பாராட்டினாராம். ஆகையால் காளி வெங்கட்டின் எதார்த்தமான நடிப்பால் வியந்து போன சுதா கொங்கரா ‘எனது எல்லாப் படத்திலும் காளி வெங்கட் இயக்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன்’ என்று நெகிழ்ந்துள்ளார்.
எனவே சுதா கொங்கராவின் இந்த பேட்டியை காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சுதா கொங்கராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
