Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியை நடிகராக மதிக்காத பிரபல இயக்குனர்.. மேடையில் வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாதனைகள் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் அவரை நடிகராக இன்றுவரை ஒரு இயக்குனர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனைகளை செய்த பிரமாண்ட நடிகர். இன்று வரை இவரது ஒவ்வொரு படங்களுக்கும் ஓபனிங் வசூல் பயங்கரமாக இருந்து வருகிறது.
ஆனால் ரஜினிகாந்தை ஒரு நடிகராக தற்போது வரை இயக்குனர் இமயம் பாரதிராஜா ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

rajini-cinemapettai
பாரதிராஜா இயக்குனரையும் தாண்டி நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியை அடிக்கடி கமலஹாசனுடன் ஒப்பிட்டு பேசுவாராம் பாரதிராஜா.
இதனால் ரஜினிகாந்த் ஒரு சில சமயங்களில் தான் ஒரு நடிகன் தானா என்பதை யோசித்துக் கொண்டே இருப்பாராம்.
கமலஹாசன் அளவுக்கு சினிமா தொழில்நுட்பம் பற்றிய தனது சுத்தமாக தெரியாது என பல மேடைகளில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கமலஹாசனை விட ரஜினிகாந்த்தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
