fbpx
Connect with us

Cinemapettai

மகனை நினைத்து கவலை.. மூட் அவுட்டில் முருங்கைக்காய் பார்ட்டி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மகனை நினைத்து கவலை.. மூட் அவுட்டில் முருங்கைக்காய் பார்ட்டி!

தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் அந்த முருங்கைகாய் பார்ட்டி. அன்றைய காலகட்டங்களில் அவர் இயக்கிய படங்களுக்கு பெண்கள் கூட்டம் படையெடுத்துச் செல்லும்.

கிளுகிளுப்பான விஷயங்களையும் பெண்களுக்கு பிடிக்கும் வகையில் எதார்த்தம் கலந்து கொடுப்பதில் கில்லாடிதான். 90 களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருடைய கதை திறமைக்கு பாலிவுட் சினிமாவுக்கு கூட அடிமையாக இருந்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய இயக்கத்திலேயே மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் படமே பெரிய தோல்வி. இருந்தும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றிரண்டு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார்.

இருந்தும் அவரது மகன் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம் முருங்கைக்காய் பார்ட்டி. தன்னுடைய மகனுக்காக தற்போது வரை பல முன்னணி இயக்குனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருந்தும் தன்னால் மகனுக்கு ஒரு நல்ல வழி காட்ட முடியவில்லையே எனவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட அவரது மகன், ஏனோ மக்களால் ரசிக்கபடவில்லை.

எப்படியாவது தன் மகனை கரை செய்துவிட வேண்டும் என முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை அனைவரிடமும் தன் மகனுக்காக வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்படிக் கிடைத்த வாய்ப்புதான் முன்னணி நடிகரின் பட வாய்ப்பு.

என்னதான் சினிமாவில் பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுக்கு நல்லதும் கெட்டது மக்கள் நினைத்தால் மட்டுமே நடக்கும் என்பது பல இயக்குனர்களின் மகன்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதேபோல் பல முன்னணி இயக்குனர்களின் மகன்களும் தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னேற முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top