Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.

கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா இந்த திரைப்படம் ஹிட் ஆனதால் அடுத்ததாக அஜித்தின் வீரம் படத்தை இயக்கினார் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் அடுத்ததாக அஜித் சிவாவுக்கே வாய்ப்பு கொடுத்தார் அதனை தொடர்ந்து வேதாளம், விவேகம் என தொடந்து வாய்ப்புகள் கொடுத்தார்.
அதன் பிறகு தற்பொழுது அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம் இதனையும் சிவாதான் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் அஜித் டபுள் ஆக்ஷனில் வர இருக்கிறார் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்கள் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் சிவாவின் அடுத்தப்படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது வெகு விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
