Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேதாளம் படப்பிடிப்பில் அழுத பிரபலம்.. முதன்முறையாக மனம் திறந்த இயக்குனர் சிவா

இயக்குனர் சிவா வேதாளம் படப்பிடிப்பில் தம்பி ராமையா அதிகம் அழுதது தான் இன்னும் மறக்க முடியாத நினைவாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த இரண்டாவது படம் வேதாளம். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். ஏற்கனவே அஜித்தின் வீரம் என்னும் வெற்றி படத்தை கொடுத்த கூட்டணி என்பதால் இப்படமும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸை குவித்தது. அஜித்துடன் உலக நாயகன் மகள் ஸ்ருதிஹாசன் ஜோடி போட்டு இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனனும், தம்பி ராமையாவும் நடித்து இருந்தனர். அஜித்தின் லுக் முதல் பாடல் வரை ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று தந்தது. 2015ம் ஆண்டில் வெளியான இப்படம் தலயின் மாஸ் ஹிட் படமான மங்காத்தா வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிவா, தம்பி ராமையா அழைப்பின் பேரில் கலந்து கொண்டார். அப்படத்தில் நாயகனாக தம்பி ராமையா மகன் நடித்து இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய சிவா, வேதாளம் படப்பிடிப்பில் தம்பி ராமைய்யா தான் மிகவும் அழுதார். அப்போது அவரது அம்மா உடல்நிலை கவலைக்கு இடமாக இருந்தது. அதனால் எப்போதுமே சோகமாக இருந்தார். என்னிடம் அவர் அம்மாவை பற்றி தான் எப்போதும் பேசுவார். அவருக்கு அடுத்ததாக தன் மகனை பற்றி படக்குழுவினருடன் பேசிக் கொண்டு இருப்பார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். அஜித் நடிப்பில் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன் நாயகியாக நடிக்கும் இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top